ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டூவீலர் விழிப்புணர்வு பிரசாரம்

வேதாரண்யம், ஜூன் 11: வேதாரண்யம் தாலுகா ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டூவீலர் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பேரணியை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி துவக்கி வைத்தார். குரவப்புலம், கரியாப்பட்டினம், செட்டிப்புலம், கத்தரிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிக்கு சென்று எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தில் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கோவை சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், தொழிற் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>