×

மின் கட்டண உயர்வை கண்டித்து காரைக்காலில் பாஜ ஆர்ப்பாட்டம்

காரைக்கால், ஜூன் 11: புதுச்சேரி அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, காரைக்காலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி அரசு அண்ணையில் மின்கட்டண உயர்வை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட பாஜக சார்பில், காரைக்கால் மதகடியில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் தெற்கு தொகுதி பாஜக தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். இதில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை புதுச்சேரி அரசு உடனே ரத்து செய்து, பழைய கட்டண முறையே தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : demonstration ,BJP ,Karaikal ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...