×

கொள்ளிடம் பகுதியில் உள்ள அறநிலையத் துறை கோயில்களில் அன்னதான திட்டம் துவங்க வேண்டும்

கொள்ளிடம், ஜூன் 11: நாகை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருந்தும் அன்னதானத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கொள்ளிடம் அருகே சிவலோக தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிக பக்தர்கள் இங்கு வந்தும் இந்து சமய அறநிலையத்துறையினர் சார்பில் இங்கு அன்னதானத்திட்டம் செயல்படுத்தவில்லை. மேலும் மாதிரவேளுரில் உள்ள மாதலீஸ்வரர் கோயில் வடரெங்கத்தில் உள்ள ரெங்கநாதபெருமாள் கோயில் திருமயிலாடி சுந்தரேஸ்வரர், திருக்கருகாவூர் சிவன் கோயில், திருமுல்லைவாசலில் உள்ள முல்லைவனநாதர் கோயில் மகேந்திரப்பள்ளியில் உள்ள திருமேனியழகர் மற்றும் விஜயகோதண்டராமர் கோயில் ஆகியவைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாகவும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. இக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான எந்த கோயில்களிலும் அரசின் அன்னதானத்திட்டம் செயல்படுத்தவில்லை. எனவே உரிய கோயில்களில் அன்னதானத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆன்மிகத்தலைவர் பட்டுரோஜா இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : temples ,area ,Kulamikulam ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு