×

வத்திராயிருப்பு அருகே அரசுப் பள்ளியில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு

வத்திராயிருப்பு, ஜூன் 11: வத்திராயிருப்பு அருகே, அரசுப் பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே,  தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்; 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் போதிய தண்ணீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியரின் புழக்கத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும், போர்வெல்லில் போதிய தண்ணீர் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, இல்லாவிடில் மாற்று இடத்தில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியில் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழாயில் வரும் நீரை மேலேற்றி, மாணவர்களின் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொட்டி காட்சிப் பொருளாக  சாப்பிட்டவுடன் மாணவர்கள் கை கழுவ தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். எனவே, வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : government school ,sanatorium ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா