×

கலெக்டரிடம் மனு குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

விருதுநகர், ஜூன் 11: விருதுநகர் அல்லம்பட்டியில் குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சிலையின் பின்புறத்தில், பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து கடந்த மாதம் இந்த கடை மூடப்பட்டது. மூடப்பட்ட கடையை அதே பகுதியில் விவிஆர் காலனி குடியிருப்பு பகுதியில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு பெண்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரேவதி தலைமையில் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘அல்லம்பட்டி விவிஆர் காலனி, பாரதி நகர் பகுதிகளிளில் பொதுமக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். எங்களின் குடியிருப்புகளுக்கு இடையே உள்ள வீட்டில் அரசு ஒயின்ஷாப் திறக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி, கல்லூரி மாணவ, மாணவியர் சென்று வரும் பாதையில் டாஸ்மாக் கடை திறப்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும். மேலும், கூலித்தொழிலாளர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பிரச்சனைகள் ஏற்படும். மக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளனர்.

Tags : petitioner ,shop ,Tashkm ,area ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி