நீட் தேர்வை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 11: நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீட்தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென  தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் பாலசந்திரபோஸ் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, நீட் தேர்வால் மாணவ,மாணவியர் உயிர்பலியாவதை தடுக்க நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Demonstration ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது