×

கரூரில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்

கரூர், ஜூன் 11: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது குறித்து கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜூன் 14ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...