×

கரூர் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டிகளால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

கரூர், ஜூன் 11: கரூர் நகராட்சிக்குட்ட பல பகுதிகளில் செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பல பகுதிகளில் உள்ள சின்டெக்ஸ் டேங்க்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் உபரி தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் தற்போது இல்லாத நிலையில் இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வழியின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி பகுதிக்குள் செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்குகளை பழுது பார்த்து, மக்கள் நலன் கருதி அதனை செயல்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : municipality ,Karur ,
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...