×

கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் அழைப்பு வெண் பன்றி வளர்ப்பு பயிற்சியில் சேர 17க்குள் விண்ணப்பிக்கலாம்

கரூர், ஜூன் 11: வென்றிபன்றி வளர்ப்பு குறித்த பயிற்சிக்கு பண்ணையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பண்டுதக்காரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு வெண்பன்றி வளர்ப்பு பற்றிய கல்விசுற்றுலா மற்றும் பயிற்சிக்கு கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெண்பன்றி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, தீவன செலவை குறைக்கும் வழி முறைகள், பன்றிகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறை, விற்பனை உத்திகள், பன்றி இறைச்சி பொருட்கள் தயாரிப்பு, பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், பண்ணை இயந்திரங்கள், பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பன்றி வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் மூலம் பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இந்த கண்டுணர் சுற்றுலாவின் ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டியில் நடைபெறும் வெண்பன்றி வளர்ப்பு, கண்காட்சி, கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுவர். இப்பயிற்சியில் நபார்டு குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். போக்குவரத்து வசதி, தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில் கையேடு, சான்றிதழ் வழங்கப்படும். பன்றி வளர்ப்பில் ஆர்வம் உள்ள பண்ணையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் வரும் 17ம் தேதிக்கு முன்பு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என மையத்தின் தலைவர் முனைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : chairperson ,Veterinary University Research Institute ,
× RELATED திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி ஆண்டு விழா