×

புன்னம் பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைத்தால் போராட்டம்

க.பரமத்தி, ஜூன் 11: உயர்மின் கோபுரம் அமைப்பதை உடனடியாக கைவிட்டு மாற்று பாதையில் சாலையோரமாக கேபிள் அமைத்து மட்டுமே செயல்படுத்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி சுற்று பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் ரங்கபாளையம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் புன்னம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் அருணாச்சலம், ஏர்முனை இளைஞர் அணி மாநில செயலாளர் சக்திவேல்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு மாநில செயலாளருமான ராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டம் குறித்து பேசினர். கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை உடனடியாக கைவிட்டு மாற்று பாதையில் சாலையோரமாக கேபிள் அமைத்து மட்டுமே செயல்படுத்திட வேண்டும் எனவும் அதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வது. விவசாயிகள் எதிர்ப்பை மீறி உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்கள் வழியாக கொண்டு வரும் முயற்சியினை கண்டிப்பது மீறி செயல்படுத்தினால் அரசு விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்துவதென ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் நல்லசிவம், தமிழ்சேரன், வீரப்பன், ராமசாமி உள்ளிட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : power tower ,farms ,area ,Punnam ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...