×

பாளம் பாளமாக வெடித்த விவசாய நிலம் கரூர் மினி பேருந்து நிலையத்தில் நெரிசலால் பயணிகள் அவதி

கரூர், ஜூன் 11: மினிபேருந்து நிலையத்தில் நெரிசலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மினி பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் வந்து செல்கின்றன. 20க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றன. பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விரிவுபடுத்தப்பட்டது. நகராட்சி கடைகள் அகற்றப்பட்டு இடம் அளிக்கப்பட்டது. எனினும் 8 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. பேருந்துகள் உள்ளே வந்து வெளியே செல்வதற்குள் கடும் நெரிசலை சந்தித்து வருகின்றன. பேருந்து நிலையத்தின் நெரிசலை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : farm land ,bus terminals ,Karur ,passengers ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...