உதவி செயற்பொறியாளரை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்புத்தூர், ஜூன் 11:  திருப்புத்தூரில் மின்வாரிய உதவி செயற்பொறியாளரை கண்டித்து மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிரே உதவி செயற்பொறியாளரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து மின் ஊழியர்கள் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, மின்சார வாரிய ஊழியர் பெடரேசன் அமைப்பின் தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார். செயலாளர் வீரபாண்டி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மின் ஊழியர்களை சமுதாயம் சார்ந்த நோக்கில் வேறுபடுத்துவதாகவும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பணிச்சுமை அதிகப்படுத்துவதாகவும், மேலும் மின் கணக்கீட்டாளர்கள் விடுப்பில் இருப்பின் சேமிப்புக் கணக்கீட்டாளர்களை வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அலுவலகம் வரும் போக்கினை கண்டித்தும் கோஷமிட்டனர்.

× RELATED நாமக்கல்லில் ஓட்டுப்பதிவன்று மின்...