புகழூர் சர்க்கரை ஆலையில் அரவை பணியை உடனே துவங்க வேண்டும் கரும்பு வளர்ப்போர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 11: புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு வளர்ப்போர் நலசங்க கூட்டம் ஆடிட்டர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கதிர்வேல் வரவேற்றார். சாமியப்பன், பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புகழூர் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் கரும்புகள் காய்ந்து வருவதையும், கரும்புகளை நோய் தாக்கியதையும் நிர்வாகியிடம் எடுத்துக்கூறி சர்க்கரை ஆலையின் அரவையை உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்துவது, கரும்பு வெட்டுக்கூலியை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிர்வாகிகள் ஆலை நிர்வாகிகயை சந்தித்து கோரிக்கைளை எடுத்துக்கூறினர். அதற்கு அவர், இம்மாத இறுதிக்குள் சர்க்கரை ஆலையின் அரவையை துவக்கி விரைவில் கரும்புகளை வெட்டுவதாக உறுதியளித்தார்.

Tags : Sugar Mill ,meeting ,Sugarcane Farmers Association ,
× RELATED பொங்கலுக்கு விற்பனையாகாத செங்கரும்பை...