×

3 ஆண்டாக மழையில்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூன் 11:  ராமநாதபுரம் மாவட்டம் கடந்த மூன்றாண்டுகளாக மழை பெய்யாத நிலையில் வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி, மார்க்சிஸ்ட் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க தாலுகா தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கத்தார், நல்லதம்பி, நாகரத்தினம், சௌந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மயில்வாகணன் சிறப்புரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை. கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மழை பெய்யுமா என தெரியவில்லை. விவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு தொகையும் வந்து சேரவில்லை. மழையில்லாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், வெண்ணத்தூர், வட்டக்குடி, குமரியேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள
விவசாயிகளுக்கு 2016-17ம் ஆண்டு பயிர்காப்பீடு முழுமையாக கிடைக்கவில்லை என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வறட்சியினால் மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க தாலுகா செயலர் கல்யாணசுந்தரம் மற்றும் குமரியேந்தல் ராக்கப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள்  கலந்துகொண்டனர்.

Tags : unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...