×

மழை வேண்டி விளக்கு பூஜை

ராமநாதபுரம், ஜூன் 11:  ராமநாதபுரம் அருகே நயினார்கோயில் நாகநாதர் சுவாமி கோயிலில் ராமநாதபுரம் மாவட்ட விவேகானந்த கேந்திரத்தின் சார்பில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 45 கிராம பெண்கள் கலந்து கொண்ட மழை வேண்டி சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாத நிலையில் கிராமங்களில் நெல், பயிர் விளைச்சல் இல்லை. விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் இந்தாண்டு மழை பெய்ய வேண்டி ராமநாதபுரம் மாவட்ட விவேகாந்த கேந்திரத்தின் சார்பில் நயினார்கோயில் நாகநாதர் சுவாமி கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி பூஜையை துவக்கி வைத்தார். 45 கிராமங்களை சேர்ந்த 860 பெண்கள் கலந்து கொண்டனர். மழை வேண்டி மந்திரங்களை சொல்லி பூஜைகள் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை கேந்திர மாவட்ட பொறுப்பாளர் சகுந்தலா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை