×

சேலம்-கரூர் பாசஞ்சர் 4 நாட்களுக்கு ரத்து

சேலம், ஜூன் 11: சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. சேலத்தில் இருந்து கரூருக்கு தினமும் இருமார்க்கத்திலும், பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் இயக்க பாராமரிப்பு பணி இன்று (11ம் தேதி) தொடங்கி 4 நாட்கள் நடக்கவுள்ளது. அதனால், சேலம்-கரூர்-சேலம் பாசஞ்சர் ரயில் (56107, 56108) இன்று முதல் வரும் 14ம் தேதி வரை 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : passenger ,Salem-Karur ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...