திருமங்கலம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திருமங்கலம், ஜூன் 11: வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து திருமங்கலத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் அருகேயுள்ள வலையபட்டியில் இருபிரிவினருக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் ஒருதரப்பை சேர்ந்த 78 பேர் மீது நாகையாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த திருமங்கலம் வக்கீல்கள் தங்கபாண்டி, கருணாகரன் ஆகியோர் வலையபட்டிக்கு சென்று விசாரித்துள்ளனர். போலீசார் இவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். இதுதொடர்பாக திருமங்கலம் வக்கீல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வக்கீல் சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி தலைமையில் நடந்த கூட்டத்தில் கோர்ட் புறக்கணிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று திருமங்கலம் வக்கீல்கள் கோர்ட்டினை புறக்கணித்தனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்பி மணிவண்ணனை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

Tags : Court Negotiation of Tirumangalam Attorneys ,
× RELATED விபத்தில் தம்பதி தவறவிட்ட நகை,...