ஆத்தூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து பள்ளி மாணவி பலி

ஆத்தூர், ஜூன் 11: ஆத்தூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார். ஆத்தூர் அருகே உள்ள மேலக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் பவன்யா(15). ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இவர் நேற்று காலை பள்ளிக்கு செல்ல சொக்கநாதபுரம் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றும் தனது பெரியப்பா நாகராஜூடன் அவரது பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது, பைத்தூர்குடகு பகுதியில் டூவீலர் வந்தபோது, சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க நாகராஜ் பைக்கை திருப்ப முயன்றார்.

இதில், நிலை தடுமாறி, இருவரும் சாலையில் விழுந்ததில், பவன்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவனைக்கு பவன்யா கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த நாகராஜ் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : school student ,Atoor ,
× RELATED பள்ளி படிக்கட்டில் தவறி விழுந்த மாணவன் பலி