×

குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு மேம்பால பணிக்காக இன்று முதல் காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

மதுரை, ஜூன் 11: காளவாசல் சந்திப்பு மேம்பால பணிகள் நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை காளவாசல் சாலை சந்திப்பில் மேம்பாலம் பணிகள் மற்றும் பாலத்தின் உத்திரங்கள் தூக்கி வைக்கப்படும் பணிகள் நடைபெறுகிறது. எனவே காளவாசல் சந்திப்பிலிருந்து சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, இலகுரக மற்றும் கனரக வாகனங்களில் வழித்தடங்கள் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை (20 நாட்கள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை மூடப்படுவதால் காளவாசல் சந்திப்பு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அவ்வழியாக செல்ல அனுமதி இல்லை. களவாசல் சந்திப்பு வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய டூவீலர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் காளவாசல் சந்திப்பு - அரசரடி சந்திப்பு - ஏஏரோடு - ஞானஒளிவுபுரம் வழியாக சென்று இடது புறம் திரும்பி டிடிரோடு வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.

மேற்படி சந்திப்பு வழியாக வரும் கனரக வாகனங்கள் அரசரடி சந்திப்பு - புதுஜெயில் ரோடு - மேலப் பொன்னகரம் சாலை - கரிமேடு காவல் நிலைய சாலை - சோனையார் கோவில் சந்திப்பு (ஆரப்பாளையம் ரவுண்டானா) வழியாக செல்ல வேண்டும். குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து காளவாசல் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் அதே சாலையில் மேற்குபுற மாற்று சாலையில் உள்ள வழித்தடம் வழியாக காளவாசல் சிக்னல் வந்து பிரிந்து செல்ல வேண்டும்.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குரு தியேட்டர் சந்திப்பு செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் அரசரடி சந்திப்பு - ஏஏ ரோடு - டிடி ரோடு வழியாகவும், கனரக வாகனங்கள் காளவாசல் சந்திப்பு - அரசரடி சந்திப்பு - புதுஜெயில் ரோடு - மேலப்பொன்னகரம் சாலை - ஆரப்பாளையம் ரவுண்டானா வழியாகவும் செல்ல வேண்டும். எனவே, வாகனஓட்டிகள் அனைவரும் வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Tags : Kalaivasal ,workshop ,junction ,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...