×

சேலம் அருகே வறட்சியால் தண்ணீரின்றி காய்ந்து கருகும் தென்னை மரங்கள்

சேலம், ஜூன் 11:  சேலம் மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயிலின் காரணமாக  எருமாபாளையம், சன்னியாசிகுண்டு, வீராணம், பருத்திக்காடு, வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி,  மகுடஞ்சாவடி,  உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் மரங்கள் காய்ந்து வருகின்றன. சேலம் பருத்திக்காட்டில் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. நடப்பாண்டு கடந்த 6 மாதத்திற்கு மேலாக மழை இல்லாததால், பருத்திகாடு பகுதியில் தென்னை மரங்கள் காய்ந்து  கருகிய நிலையில் காட்சி அளிக்கிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘பருத்திகாடு பகுதியில் கோடையில் சற்று தண்ணீர் இருக்கும். ஆனால், நடப்பாண்டு 6 மாதத்திற்கு மேலாக மழை இல்லாததால் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. விவசாய பணிகள் 75 சதவீதம் நடைபெறவில்லை. எப்படியும் கோடையில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாதக்கணக்கில் மண் காய்ந்து வருவதால் நிலத்தில் ஈரப்பதம் இல்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் இருக்கும் தென்னை மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. கோடை மழை பெய்தால், மரங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைத்து, பசுமையாக காட்சியளிக்கும். எனவே, மழை தான் கருணை காட்ட வேண்டும்,’ என்றனர்.

Tags : drought ,Salem ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...