×

அயோத்தியாப்பட்டணத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

வாழப்பாடி, ஜூன் 11:அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் திமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியகவுண்டாபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் அரங்கநாயகி குப்புசாமி, மகேஸ்வரன், வழக்கறிஞர் கந்தசாமி, மணி, சரவனா ஏஜென்சி  ரமேஸ்குமார், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karunanidhi ,birthday party ,Ayodhyattinam ,
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...