×

கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூன் 11: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவவீரர் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 10 மாதமாக மருந்து, மாத்திரை இல்லாததை கண்டித்து முன்னாள் ராணுவவீரர்கள்  கலெக்டர் அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் ராணுவீரர்கள், வீரமங்கையர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ராணுவீரர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களாக தேவையான அளவில் மருந்து, மாத்திரைகள் இல்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான அத்தியாவசிமான மாத்திரைகள் கூட இல்லாத நிலையை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் ராஜூ, செயலாளர் குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:

முன்னாள் ராணுவவீரர் மருத்துவமனையில் சேர்வதற்கு நாங்கள் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டும். மாதம்தோறும் ரூ.1 ஆயிரம் கட்ட வேண்டும். மேலும் உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். வெல்லிங்டன்னில் இருந்து மருந்து, மாத்திரைகளை வாங்கி அனைத்து மருத்துவமனைகளிலும் அளிப்பதை தவிர்த்து, சென்னையில் இருநது மருந்து, மாத்திரைகளை வாங்கி அளிக்க வேண்டும். அனுமதியில்லாத மருத்துவமனையில் சேர்ந்தாலும், அங்கு முன்னாள் ராணுவவீரர்கள் சிகிச்சை பெறும் செலவை அளிக்க வேண்டும். முன்னாள் ராணுவவீரர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி பெறுவதற்கு தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். முன்னாள் ராணுவவீரர்களுக்கு மருத்துவமனை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு முன்வருவதில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு மருத்துவமனைக்கு தனி நிதி ஒதுக்குவது போல, இ.சி.எச்.எஸ்.,க்கும் தனி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது, முன்னாள் ராணுவவீரர்கள் கலந்தாய்வு கூட்டத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அழைப்பதில்லை என குற்றம்சாட்டினர்.

Tags : army soldiers ,office ,Collector ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு