தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 11: பர்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு கூட்டம் நடந்தது. வட்டத்தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முனிராஜ், அறிக்கை வாசித்தார். மாநில குழு உறுப்பினர் கண்ணு விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில், படேதலாவ் ஏரிக்கு எண்ணேகொள்புதூரில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து, பர்கூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பட்டுப்போன மா, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளதால், மாங்கூழ் ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, விவசாய பணிகளுக்கு அனுப்ப வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதிய தொகையை, அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் மாரியப்பன், ராஜேந்திரன், மணிவாசகம், மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாம்ராஜ் நன்றி கூறினார்.

Tags : meeting ,Tamilnadu Farmers Association VCC ,
× RELATED முதல்வர் எடப்பாடி சந்திப்பின்...