×

ஓசூரில் புதினா விளைச்சல் அதிகரிப்பு

ஓசூர், ஜூன் 10: ஓசூர் பகுதியில் புதினா விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்துள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு அனைத்து வகையான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கொய்மலர்கள் பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, இப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதினா பயிரிட்டுள்ளனர். சாகுபடிக்காக ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரையிலும் செலவாகிறது.

90 நாட்களில் விளைச்சல் வரக்கூடிய இப்பயிர், ஒரு முறை பயிரிட்டால் 3 வருடங்கள் தொடர்ந்து இருக்கும். கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் புதினா செழித்து வளர்ந்துள்ளது. இதனால் புதினாவை பறித்து கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தினமும் அனுப்பி வருகின்றனர். ஒரு கட்டு ₹20 முதல் ₹30 வரை விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு