×

நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் ஓசூரில் நினைவேந்தல் கூட்டம்

ஓசூர், ஜூன் 11: மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வில் உரிய மதிப்பெண்கள் கிடைக்காத அதிர்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த வைசிகா, திருப்பூர் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஓசூர் ராம் நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

அதே வேளையில், கிராமப்புற ஏழை -எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நீட் ஒழிப்பு கூட்டமைப்பு தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். செயலாளர் வனவேந்தன், பொருளாளர் எல்லோரா மணி, செய்தி தொடர்பாளர் அல்தாப் அகமது முன்னிலை வகித்தனர். சத்யா, எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், சிபிம் மாவட்ட குழு சேதுமாதவன், சிபிஐ நிர்வாகக்குழு மாதையன், சிவந்தி அருணாச்சலம், ஜேம்ஸ் ஏஞ்சலா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Tags : Meeting ,Horserad ,NEA ,
× RELATED டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு