ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிப்பட்டு, ஜூன் 11 : ஆர்.கே.பேட்டை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நேற்று காலை  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பருவ மழை வெகுவாக குறைந்துள்ள நிலையில் நீர் நீர் நிலைகள் வறண்டு கடும் வறட்சி நிலவுகின்றது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டம் 600 அடிக்கும் கீழே சென்று விட்ட நிலையில் குடிநீருக்கு பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். கோடை வெயில் துவக்கத்திலிருந்தே குடிநீர் கேட்டு தொடர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள ஏதுவாக  ஊரட்சி ஒன்றிய நிர்வாகத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் அரசு அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை நாராயாணபுரம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க கோரி கிராமமக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் ஆர்.கே.பேட்டை- அம்மையாகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : road ,blocking ,removal ,drinking water shortages ,RKPet ,
× RELATED மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 733 பேர் கைது