×

காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

திருவள்ளூர், ஜூன் 11: திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். திருவள்ளூர் - ஆவடி மாநில நெடுஞ்சாலையோரம் காக்களூர் ஊராட்சியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.  இந்த கடைக்கு வரும் குடிமகன்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று பலமுறை மக்கள்  கோரிக்கை விடுத்த வந்த நிலையில், தற்போது குடிமகன்களின் வருகை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.  

குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள இந்த பகுதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : removal ,shop ,Tasmacht ,housing department ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்