×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர், ஜூன் 11: உத்திரமேரூர் கிளை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த அ.பி. சத்திரம் கிராமத்தில் உத்திரமேரூர் கிளை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நேற்று நடந்தது. வட்டார தலைவர் வைலட் இருதய மேரி தலைமை தாங்கினார்.

செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.உபரி ஆசிரியர்கள் என இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணி அமர்த்துவதை கைவிட வேண்டும். 2019 - 20ம் ஆண்டில் ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு நடத்த வேண்டும். போராட்ட காலத்தின்போது ஆசிரியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

Tags : protests ,primary school teachers ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா