தாறுமாறாக கார் ஓடி 4 பேர் படுகாயம் விபத்து ஏற்படுத்திய முதியவர் கைது

தாம்பரம், ஜூன் 11: சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில், மப்பேடு சந்திப்பு அருகே கடந்த 8ம் தேதி மின்னல் வேகத்தில் சென்ற ஒரு கார், சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளில் வேகமாக மோதி, பின்னர் முன்னால் சென்ற 2 பைக்குகளின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் அகரம் தென் பிரதான சாலை பதுவாஞ்சேரியை சேர்ந்த கிளரசன் கேன்வாஸ் பிரபு (18), அவரது நண்பர் விக்ரம் (18), மப்பேடு கலைஞர் நகரை சேர்ந்த ஆறுமுகம் (43), அவரது மனைவி சாந்தி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகாரின்படி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், விபத்து ஏற்படுத்தியது, அகரம் தென் பிரதானசாலை, பதுவாஞ்சேரியை சேர்ந்த வரதன் (54) என்பவர் என தெரிந்தது. இதற்கிடையில், விபத்து ஏற்படுத்திவிட்டு, யாருக்கும் தெரியாமல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த வரதனை, நேற்று முன்தினம் இரவு போலீசார் வரதனை கைது செய்து, தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : car crash ,car accident ,
× RELATED கார் மோதி விபத்து; 3 பேர் படுகாயம்