பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, ஜூன் 11: பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வர் செண்பகராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு, கடந்த மே 29 மற்றும் 30ம் தேதிகளில் நடந்தது. இக்கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள் போக, மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே, காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல, நேரடி இரண்டாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர, வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இயலாதவர்களும், கலந்துகொண்டு சேர்க்கை பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Government ,Polytechnic College ,
× RELATED அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட...