மா.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டம்

தர்மபுரி, ஜூன் 11: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம், தர்மபுரி கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, மாரிமுத்து, நாகராசன், முத்து, அர்ச்சுனன், மல்லையன், ராமச்சந்திரன், கிரைசாமேரி, விசுவநாதன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். வார்டுகளில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம் கிடைக்கவும், கூட்டுறவு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் தாராளக்கடன் வழங்கவும் முன்வர வேண்டும். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

× RELATED வேப்பிலைப்பட்டியில் உரம் தயாரிப்பு நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தல்