அமமுக கூட்டம்

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரியில் அமமுக சார்பில், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ முருகன், அவை தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Meeting meeting ,
× RELATED கரூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்...