×

தர்மபுரி திமுக எம்பி வாக்காளர்களுக்கு நன்றி

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்பி டாக்டர் டிஎன்வி செந்தில்குமார், தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று முன்தினம், நகர பேருந்து நிலையத்தில், சிறுவியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், எம்ஜிஆர் நகரில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, முன்னாள் நகர மன்ற தலைவர் சிட்டி முருகேசன், முன்னாள் கவுன்சிலர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், தர்மபுரியில் சமூக வலைதள நண்பர்கள் கலந்துரையாடல், எம்பி செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இருந்து பங்கேற்றவர்கள், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

Tags : MPs ,DMK ,Dharmapuri ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்