அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் தார்சாலை அமைக்க மாணவர்கள் கோரிக்கை

பென்னாகரம், ஜூன் 11: பென்னாகரம் அருகே ஊட்டமலை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த ேவண்டும் என மாணவர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். பென்னாகரம் அருகே, கூத்தப்பாடி பஞ்சாயத்தில் ஊட்டமலை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்திரா நகர் காலனி, போயர் தெரு, ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளிக்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, தார் சாலை வசதி ஏற்படுத்த கோரி, அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தார் சாலை வசதி ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாணவர்கள், அவர்களது பெற்றோர் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school ,
× RELATED தாமிரபரணியில் புதைந்துள்ள புராதன...