×

நேதாஜி பைபாஸ் சாலையில் சென்டர்மீடியன் தடுப்பை அகற்ற கோரி பாஜ மனு

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி நகர பாஜக சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் பிடமனேரி, கந்தசாமி வாத்தியார் தெரு சாலைகள் சந்திக்கும் இடத்தில், கந்தசாமி வாத்தியார் தெருவில் இருந்து, நேதாஜி பை-பாஸ் சாலையின் குறுக்கே பிடமனேரிக்கும், பிடமனேரி சாலையில் இருந்து கந்தசாமி வாத்தியார் தெருவிற்கு செல்லும் சாலை வசதி இருந்தது. இந்த இரு சாலையின் குறுக்கே, சென்டர் மீடியன் அமைத்து தடுக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், கணேஷ் தியேட்டர் வழியாக சென்று திரும்பி வர வேண்டியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்தும் நடக்கிறது. 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையின் குறுக்கே, தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை திருப்பி விடச்சொல்வதால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, போலீசார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல, சென்டர் மீடியன் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றி விட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : BJP ,removal ,Centermedian ,Netaji Bypass Road ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...