×

பாப்பாரப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் சாவு

தர்மபுரி, ஜூன் 11:பாப்பாரப்பட்டி சீராம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் நாகராஜன் (எ) நாகப்பன்(30). மினிவேன் டிரைவரான இவருக்கு, கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 4ம் தேதி, நாகப்பன் மினிவேனை ஓட்டிக்கொண்டு பாப்பாரப்பட்டி சென்றார். அப்போது, சிட்லகாரம்பட்டி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நாகப்பனை மீட்ட அங்கிருந்தவர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Paparapatti ,
× RELATED கஞ்சா விற்ற டிரைவர் கைது