×

சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 நவீன வகுப்பறைகள் திறப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 நவீன வகுப்பறைகளை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேற்று திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவியர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தரமான கல்வியினை வழங்கவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தலின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 84 வள வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மாநகராட்சியில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மின்னணு வகுப்பறைகளை கொண்ட 28 பள்ளிகள் கட்டமைக்கப்பட்டு, அப்பள்ளி மின்னணு வகுப்பறைகளுக்கு தேவையான  மின்னணு உபகரணங்கள் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வள  வகுப்பறைகளாக  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அண்ணா நகர் மண்டலம் புல்லா அவென்யூ பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வகுப்பறைகள் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் சென்னை மாவட்ட ரோட்டரி சங்க பங்களிப்புடன் வள வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்பட்டன. இவ்வள வகுப்பறைகளை துணை ஆணையர் (கல்வி) குமாரவேல் பாண்டியன் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் பாபுபேரம், உதவி கல்வி அலுவலர் வசந்தி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : classrooms ,Chennai Corporation Girls Higher Secondary School ,
× RELATED காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல்...