பொட்டலூரணியில் பயணியர் நிழற்குடை இடித்து அகற்றியோர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி, ஜூன் 11: பொட்டலூரணியில்  பஸ் நிறுத்த நிழற்குடையை இடித்து அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். புதுக்கோட்டை அடுத்த பொட்டலூரணி கிராம மக்கள், கலெக்டர் சந்தீர் நந்தூரியிடம் அளித்துள்ள மனு: பொட்டலூரணி பஸ் நிறுத்தத்தில் ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை கடந்த மாதம் 29ம் தேதி இரவு இடித்து அகற்றப்பட்டுள்ளது. அதாவது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தங்களுக்கு  தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கு இடையூறாக இந்நிழற்குடை இடையூறாக இருப்பதாகக்கருதி இடித்து அகற்றியுள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார்  அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே நிழற்குடையை  இடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

× RELATED கிருஷ்ணராயபுரம்...