கோவில்பட்டி பள்ளியில் இலவச கட்டாய கல்வி கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டி, ஜூன் 11: கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கட்டாய கல்வி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கட்டாய  கல்வி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இப்பள்ளியில் எல்கேஜி  வகுப்பில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கா சேர்ப்பதற்காக ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்திருந்தனர். இதில் விண்ணப்பித்திருந்த 46 குழந்தைகளின்  பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு இலவச கட்டாய கல்வி தொடர்பான  கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர் மகாலட்சுமி, புதூர் வட்டார வளமைய அலுவலர் அஸ்வினி மற்றும்  பள்ளி முதல்வர் அருள்சகோதரி வசந்தா ஆகியோர் கலந்தாய்வு கூட்டத்தை  நடத்தினர். மேலும் ஆன்லைன் மூலம் எல்கேஜி வகுப்பில்   சேர  விண்ணப்பித்திருந்த 46 பேரில் 15 குழந்தைகள் இப்பள்ளியில் இலவச கட்டாய  கல்வி திட்டத்தில் சேர குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 11  பேர் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களும். மீதமுள்ள 4 பேர்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிரிவுகளை சேர்ந்தவர்களாவர். மேலும் தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் பள்ளியில் சேர்வதற்கான தகுந்த  ஆவணங்கள் வழங்கப்படும் நிலையில், 15 குழந்தைகளும் இப்பள்ளியில் எல்கேஜி  வகுப்பில் சேர்க்கப்படுவார் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : education consultation meeting ,Kovilpatti School ,
× RELATED கோவில்பட்டி பள்ளி விளையாட்டு விழா