×

உடன்குடியில் பணி நிறைவு பாராட்டு விழா

உடன்குடி, ஜூன் 11:  உடன்குடியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மேலாளர் சாத்தக்குட்டிக்கு பணி நிறைவுபாராட்டு விழா நடந்தது. உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அஷாப் அலி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சாந்திராம், உறுப்பினர்கள் கந்தன்,பேச்சிமுத்து, ராஜேந்திரன், முத்து, சாமுவேல், மும்தாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் வேலு, ஆசிரியர் குருஸ்விக்பர்ட், அதிமுக இலக்கிய அணி மாவட்டத் தலைவர் பொன்ராம், கந்தன், லயன்ஸ் வேணுகோபால், குலசை மனோகரன், உடன்குடி அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் பிரின்ஸ், முன்னாள் எம்எல்ஏ அமிர்தராஜ், வங்கி பணியாளர்கள் ஜாண்சன், செல்வம் வாழ்த்திப் பேசினர்.

 இதில் வக்கீல் சந்திரசேகர், இளங்கோ, குலசை முத்தாரம்மன் கோயில் முன்னாள் அர்ச்சகர் மகாராஜா, ஓய்வுபெற்ற கூட்டுறவு சார்பதிவாளர்கள் நாராயணன், ஜெயலட்சுமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், உடன்குடி நகர திமுக பொருளாளர் தங்கம், நகர திமுக அவைத்தலைவர் திரவியம், பனைவெல்லம் கூட்டுறவு சங்கத் தலைவர் முத்துராமலிங்கம், பிரியா கேஸ் தர்மராஜ், கனகராஜ், வாழும் கலை இனிகோ, ஜெயசீலன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சாமுவேல், சங்கச் செயலாளர்கள் தேவராஜ், ஜாண்சுந்தர், முத்துகிருஷ்ணன், ஜெயபால், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி, குலசேகரன்பட்டணம் ஊராட்சி அதிமுக செயலாளர் சங்கரலிங்கம், ரங்கன், சந்தையடியூர் முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சாத்தாக்குட்டி ஏற்புரையாற்றி நன்றி கூறினார்.

Tags : Udangudi ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது