×

ஆறுமுகநேரி வர்த்தக விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

ஆறுமுகநேரி, ஜூன் 11:  ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் நடராஜ நகரில் உள்ள வர்த்தக விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் முதலான பல்வேறு ஹோமங்கள் நடந்தன. பல்வேறு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கோபுர கலசத்திற்கும், வர்த்தக விநாயகருக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்கார தீபராதனை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி மதி விநாயகர் பெருமைகளை விளக்கிப் பேசினார்.
 விழாவில் லட்சுமிமாநகரம் நடராஜ தேவார பக்த பஜனை கோயில் நிர்வாகி வடபழனி லட்சுமணன், செயலாளர் ராமச்சந்திரன், நகர்நலமன்றத் தலைவர் பூபால்ராஜன், முன்னாள் பஞ். துணைத்தலைவர் முத்துராமகிருஷண்ன், தொழிலதிபர்கள் பெருமாள், ஜவஹர், ஜோதிடர் வேலாயுதம், ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க துணைச் செயலாளர் சேர்மலிங்கம், மாரியம்மன் கோயில் முன்னாள் நிர்வாகி அழகேசன், வீரமகேந்திரன், ஓய்வுபெற்ற கால்நடை மருத்துர் சுயம்பு மற்றும் பக்தர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Vasashabhisheka Festival ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு