×

கருங்குளம் தெற்கு ஒன்றியத்தில் நாளை கனிமொழி எம்பி நன்றியறிவிப்பு

திருச்செந்தூர், ஜூன் 11: கருங்குளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., வாக்காளர்களுக்கு நாளை (12ம் தேதி) நன்றி தெரிவிக்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி,. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதன்படி வைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் நாளை (12ம் தேதி) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நாளை இரவு 7.30 மணிக்கு ராமானுஜம்புதூர், 7.45 மணிக்கு சேரகுளம்,  8 மணிக்கு தாதன்குளம், 8.15 மணிக்கு கருங்குளம், 8.30 மணிக்கு செய்துங்கநல்லூர், 9 மணிக்கு ஆறாம்பண்ணை, 9.15 மணிக்கு கொங்கராயகுறிச்சி,  9.30 மணிக்கு ஆழ்வார்கற்குளம் ஆகிய பகுதிகளிலும் நன்றி தெரிவிக்கிறார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Kanimozhi MB ,Southern Union ,
× RELATED நிலக்கோட்டை புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கை விளக்க பிரசார கூட்டம்