மணிமுத்தாறு 40 அடி கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு

நெல்லை, ஜூன் 11:  மணிமுத்தாறு 40 அடி கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி சிங்கம்பட்டி விவசாயிகள் மனு அளித்தனர். அம்மனு விபரம்: மணிமுத்தாறு அணையில் 40 அடி கால்வாய் அமைந்துள்ளது. இக்கால்வாய் பாசனத்தில் ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பாப்பான்குளம், பொட்டல், மூலச்சி, மலையான்குளம் போன்ற கிராமங்களில் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்கும்.
தற்போது மணிமுத்தாறு அணையில் 64 அடி தண்ணீர் உள்ளது. எங்கள் நிலங்களுக்கு மொத்தம் இரண்டே கால் அடி தண்ணீர் போதுமானது. விவசாயிகளாகிய நாங்கள் பயன்பெறவும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும், இரண்டே கால் அடியை கணக்கிட்டு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Tags :
× RELATED போலீஸ் சேனல்