×

அம்பை நகராட்சிக்கு ரூ.32.80 லட்சத்தில் தூய்மை பணி வாகனங்கள்

அம்பை, ஜூன் 11:  அம்பை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.32.80 லட்சம் மதிப்பிலான 17 பேட்டரி கார்கள், 3 மினிலோடு ஆட்டோக்கள் துவக்க விழா நடந்தது. ஆணையாளர் பிரேம்ஆனந்த் (பொறுப்பு) தலைமை வகித்தார்.  முருகையா பாண்டியன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அம்மா உணவகத்திற்கு நகராட்சி வருவாய் பிரிவு சார்பில் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்களையும் எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் சரவணன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வீரபாகு, அதிமுக மாவட்ட துணை செயலாளர் பார்வதி பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர்கள் குமுதா பெருமாள், அக்பர்ஷா, நகர செயலாளர்கள் அறிவழகன், சங்கர நாராயணன், ராமையா, துணை செயலாளர் மதன், மாவட்ட பிரதிநிதிகள் சுடலை, யாஸ்மின், சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி, ஜெ. பேரவை பாலா, இசக்கி மூப்பனார், தங்கப்பாண்டியன், முத்துக்குமார், வடிவேலு, முத்துகருப்பசாமி, சுப்பிரமணியன், பிச்சைராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் தஸ்தகீர், ஆறுமுகம், ரவி உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ambi Municipality ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி...