திருவண்ணாமலை அருகே லாரி மோதி முதியவர் படுகாயம்

திருவண்ணாமலை, ஜூன் 11: திருவண்ணாமலை அடுத்த அஸ்வநாதசுரனை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(45),விவசாயி. இவரது தந்தை ஆறுமுகம்(65) கடந்த 7ம் தேதி திருவண்ணாமலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக தானமேடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியா வந்த லாரி எதிர்பாராத விதமாக ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை தாலுகா போலீசில் ரங்கநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Larry Mothi ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்