×

செய்யாறு ஜமாபந்தியில் திண்டிவனம்- நகரி ரயில்வே பணிகளை விரைவுபடுத்த வேண்டும் கலெக்டரிடம் ஆரணி எம்பி மனு

செய்யாறு, ஜூன் 11: செய்யாறில் நடந்து வரும் ஜமாபந்தியில் திண்டிவனம்- நகரி ரயில் திட்டப்பணிகளை விரைவு படுத்திடகோரி கலெக்டர் கந்தசாமியிடம் ஆரணி எம்.பி டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு அளித்தார். செய்யாறு தாலுகா அலுவலகததில் நேற்று 2வது நாள் ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் கூட்டணி நிர்வாகிகளுடன் ஆரணி எம்.பி. டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு வழங்கினார். அதில் திண்டிவனம்-நகரி ரயில் திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும், செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருத்துவர்களை நியமித்து, மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி முறையான தாமதமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மத்திய ரயில்வே அமைச்சரையும் நேரில் சந்தித்து திண்டிவனம்- நகரி ரயில்வே திட்டத்தை விரைவுபடுத்திட கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். அப்போது, கலெக்டர் கந்தசாமி திருவண்ணாமலை பாசஞ்சர் ரயிலை எக்ஸ்பிரஸாக மாற்றி சென்னை வரை நீடிக்கவும் சேர்த்து வலியுறுத்துங்கள். மேலும், காட்பாடியிலிருந்து விழுப்புரத்திற்கு திருவண்ணாமலை வழியாக வாரத்திற்கு மூன்று நாள் பேசஞ்ஜர் ரயில் செல்கிறது. இதனை எக்ஸ்பிரஸாக மாற்றி வாரத்தின் ஏழு நாட்களும் சென்னை வரை செல்லும் வகையில் நீடிப்பு செய்திட வலியுறுத்தங்கள் என்றார்.

Tags : Aryan ,Collector ,Tindivanam ,
× RELATED உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள்...