திருவண்ணாமலை அருகே சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது

திருவண்ணாமலை, ஜூன் 11: திருவண்ணாமலை அருகே வாகனங்களில் செல்பவர்களிடம் வழிபறி செய்ய சதிதிட்டம் தீட்டிய 5 பேரை போலீாசர் கைது செய்தனர். திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் நேற்று திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை கீழ்அனக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பாலத்தின் அருகே சந்தேகப்படும் படியாக 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டு அனைவரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை விரட்டி சென்று 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சோமாசிபாடி புதூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(19), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைபேட்டை கிராமத்தை சேர்ந்த செங்கையன்(23), தேனிமலை முருகர் கோயில் தெருவை சேர்ந்த ஜெயவேல்(17), புருஷோத்தமன்(18), தேனிமலை ராதாபாய் தெருவை சேர்ந்த குணா(18) என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் 5 பேரும் அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களை வழிமறித்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிப்பது குறித்து திட்டம் திட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,Thiruvannamalai ,
× RELATED திருப்பாலைக்குடி அருகே மணல் திருடிய 2 பேர் மீது வழக்கு