×

மூடப்பட்ட விடுதிகளை திறக்கக்கோரி கிரிஜன மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சித்தூரில் நடந்தது

சித்தூர், ஜூன் 11: மூடப்பட்ட அனைத்து கிரிஜன விடுதிகளையும் திறக்கக்கோரி சித்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே கிரிஜன மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று ஆந்திர மாநில கிரிஜன மாணவர் சங்க மாநில செயலாளர் அங்குலப்பா நாயக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் கிரிஜன பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் கிரிஜன விடுதியில் தனியாக தங்கிப் படித்து வந்தனர். ஆனால், மாநில அரசு சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரிஜன விடுதிகளில் படிக்கும் மாணவர்களை குருகுல விடுதியில் தங்க வைத்து படிப்பு கற்றுத் தருகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பல ஆண்டுகளாக கிரிஜன விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களை ஆண்டுக்கு 150 பேராக பிரித்து குருகுல விடுதியில் சேர்த்து அங்கேயே படிக்குமாறு விடுதி காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிரிஜன மாணவ, மாணவிகள் மற்ற விடுதிகளில் தங்கிப் படிப்பதற்கு தயக்கம் காட்டுகிறன்றனர். மேலும், இந்த மாதம் 12ம் தேதிக்குள் அனைத்து விடுதிகளும் திறக்கப்பட உள்ள நிலையில் மாநில அரசு ஏற்கனவே அனைத்து விடுதி காப்பாளர்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை ஒரு விடுதிகளும் திறக்காமலும், அடிப்படை வசதிகள் செய்யாமலும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். மேலும் ஏராளமான விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கலெக்டர் உடனடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் சென்று ஆய்வு நடத்தி அடிப்படை வசதிகள் சீராக உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

அவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாத விடுதிகளில் உடனடியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இழுத்து மூடிய அனைத்து கிரிஜன விடுதிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
மேலும் குருகுல விடுதியில் தங்கி படிக்கும் கிரிஜன மாணவ, மாணவிகளை உடனடியாக கிரிஜன விடுதிக்கே மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிரிஜா மாணவர்களும் கலெக்டர் அலுவலகம் முன் மாபெரும் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏராளமான கிரிஜன மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : demonstration ,Chittoor ,hotels ,opening ,
× RELATED சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும்...