வீட்டு உரிமையாளரை தாக்கியவர் கைது

ஸ்பிக்நகர், ஜூன் 7:  தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (42).  முள்ளக்காடு அடுத்த எம்.சவேரியார்புரத்தில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டில் பொன்ராஜ், நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தபோதும் கடந்த சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லையாம். இந்நிலையில் இதை  கேட்க சென்றபோது மூவரும் சேர்ந்து தாக்கியதில் காமராஜ் காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் எஸ்ஐ ராஜபிரபு, நரேந்திரனை கைது செய்தார். மேலும் இருவரை தேடி வருகிறார்.

Tags : owner ,homeowner ,
× RELATED வேலூர் அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து