கருங்குளம் யூனியன் மாஜி கவுன்சிலர் மீது தாக்குதல்

சாத்தான்குளம், ஜூன் 7:  வைகுண்டம்  அருகேயுள்ள திருவரங்கப்பட்டியை சேர்ந்தவர் தனராஜ்(53) கருங்குளம் யூனியன்  முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது பழனியப்பபுரம் சேகரத்தில் உறுப்பினராக  பொறுப்பு வகித்து வருகிறார். இதுபோல் சேகரத்திற்கு உட்பட்ட கட்டாரிமங்கலம்  டிடிஏ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்த எட்வின் செல்வராஜ்  என்பவர் உடன்குடி அருகே நேசபுரம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதற்கு தனராஜ்தான் காரணம் என தலைமை ஆசிரியர் எட்வின் செல்வராஜ் கருதினார். இந்நிலையில்  சம்பவத்தன்று பழனிப்பபுரம் சிஎஸ்ஐ ஆலயம் அருகில் தனராஜ் நின்றார். அப்போது  அங்கு வந்த தலைமை ஆசிரியர் எட்வின் செல்வராஜ், தான் இடமாற்றம்  செய்யப்பட்டது தொடர்பாக தனராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதோடு கொலைமிரட்டலும் விடுத்தாராம். இதில் படுகாயம் அடைந்த தனராஜ்,  சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில்  தலைமை ஆசிரியர் எட்வின் செல்வராஜ் மீது சாத்தான்குளம் எஸ்.ஐ. சிலுவை அந்தோணி  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : attack ,councilor ,Union Majhi ,
× RELATED இந்திய ராணுவ தாக்குதல் பொய் சொல்கிறது பாகிஸ்தான்